தென் ஆப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து பதிலடி கொடுக்குமா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடங்க உள்ள நிலையில் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி இங்கிலாந்து பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் செஞ்சுரியனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 107 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இதன் மூலம் அந்த அணி 10 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா அணி இந்த டெஸ்டிலும் வென்று தனது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த டெஸ்ட் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *