BREAKING NEWS

படம் தயாரித்தது ஏன்? நடிகர் அசோக் செல்வன் பேட்டி

‘‘தெகடி‘, ‘ பீசா’‘ ‘‘பில்லா 2’’. சூது கவ்வும் பட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அசோக் செல்வன் ‘‘ஓ மை கடவுளே‘‘ என்ற படத்தைன் மூலம் முழு கதாநாயகனாக உயர்ந்து இருக்கிறார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தை அசோக செல்வனும், அவரது சகோதரி அபிநயா செல்வமும் தயாரித்து இருக்கிறார்கள்.
‘‘படம் தயாரிக்க வந்தது ஏன்?‘‘ என்று அவரிடம் கேட்டபோது அசோக் செல்வன் கூறியதவது;-
நான் பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் குறிப்பிடும் படி இன்னும் நிலையான இடம் கிடைக்க வில்லை. அதற்காக போராடி வருகிறேன். இந்த் நிலையில் என் நண்பொஅன் அஷ்வத் மாரிமுத்து ஒரு கதை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்தது. கதையை வைத்துகொண்டு பல இடங்களில் அலைந்து பார்த்தோம். எதுவும் சரி பட்டு வரவில்லை. கடைசியில் சரி நாமே தயாரித்து விடுவது என கருதி அக்காவுடன் சேர்ந்து இப்படத்தை தயாரிக்க தொடங்கினோம். அந்த சமயத்தில் ‘‘ராட்சசன்‘‘ படத்தை தயாரித்த டெல்லி பாபு இக்கதை கேட்டு படத்தயாரிப்பில் வந்தார். அவரோடு இணைந்து படம் தயாரித்து விட்டோம் படம் மிக அருமையாக வந்து இருக்கிறது.ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி என் நட்புக்காக ‘‘கடவள்‘‘ கேரக்டரில் நடித்து கொடுத்தார். படத்தில்என் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்னைகளை கடவுளாக வந்து அவர் தீர்த்து வைப்பார், அவர் நடித்த காட்சிகள் 25 நிமிடங்கள் படத்தில் இடம் பெறுகிறது.இவ்வாறு அசோக் செல்வன் கூறினார்.
கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ரித்திகா சிங் கூறுகையில்,
‘‘இப்போது நான் அதிகமாக படங்கள் நடிப்பதில்லை.. நல்ல படங்கள் மட்டுமே செய்யலாம்னு வெயிட் பண்ணினேன். இந்தக்கதை கேட்டேன். பிடிச்சது. நான் செய்யும் பாத்திரங்கள் எனக்கு பிடிக்க வேண்டும். படம் ஓடுகிறதா, இல்லையா, என்பது வேறு விசயம். செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக நாம் இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சி இப்படத்தில் எனக்கு கிடைத்து இருக்கிறது‘‘ ‘‘ என்றார்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *