BREAKING NEWS

ரஜினிகாந்த் பட தலைப்பு என்ன?

‘தர்பார்‘‘ படத்தை அடுத்து ரஜினிகாந்த் இப்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சித்தார்த், சூரி உள்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வில்லை. ஆனால் இது தான் தலைப்பு என்று மூன்று தலைப்புகள் சமூக வலை தளத்தில் சுற்றி வருகின்றன. அந்த தலைப்பு வருமாறூ:-
1)மன்னவன்,
2) அண்ணாத்த,
3) வியூகம்
அதிலும் ‘மன்னவன்’ தலைப்புக்கு போஸ்டர் டிசைன் செய்து, பர்ஸ்ட் லுக் போஸ்டர் என பதிவு செய்துள்ளனர். அதை தான் படத்தில் பார்க்கிறீர்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *