BREAKING NEWS

‘அவதார் 2’ படம் எப்படி இருக்கும்?

பட உலக வரலாற்றில் மிகப்பெரிய சாதனை புரிந்த ஹாலிவுட் படம் ‘‘அவதார்‘‘.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியையும், வசூலையும் குவித்த படம் இது. இந்தியாவிலும் சக்கை போடு போட்டது.
உலகம் முழுவதும் சுமார் 2.79 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் குவித்த அப்படத்தின் வசூல் சாதனையை 10 ஆண்டுகளாக முறியடிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு வெளிவந்த ‘அவஞ்சர்ஸ் என்ட்கேம்‘‘ என்ற படம் 2.798 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து கொஞ்சமே கொஞ்சம் கூடுதல் சாதனையைப் புரிந்தது.
இந்த சாதனையை மீண்டும் அவதார் 2 படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘. அவதார் ‘‘ படத்தை விட ‘‘அவதார் 2 ‘‘படம் மிகவும் பிரமாண்டமாக அதை விட அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. கேம்ஸ் கேமரூன் இயக்கி வருகிறார். படத்தின் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. மீண்டும் இந்த ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்த ஆண்டு ( 2021 ) டிசம்பர் மாதம் 18ம் தேதி படம் வெளீயாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது..
இந்நிலையில் ‘‘அவதார் 2 ‘‘படத்தில் உலகம் இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதைக் குறிக்கும் வகையில் சில ஆர்ட் படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். அந்த வடிவம் தான் திரையிலும் வரப் போகிறது. வரைபடங்களாகப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் அவற்றை திரையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *