BREAKING NEWS

2019-ம் ஆண்டில் அதிகம் சம்பாதித்தவர், விராட் கோலி

2019-ம் ஆண்டில் அதிாகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் இந்திய பிரபலம் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.2019-ம் ஆண்டில் அதிக பணம், புகழ் சம்பாதித்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.தொழில்களின் மூலம் வருவாய் மதிப்பீடு மற்றும் பிரபலங்களுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு, சமூக வலைத்தளத்தில் பின்தொடர்பவர்கள், விளம்பரங்களில் தோன்றுதல் போன்றவற்றின் அடிப்படையில் முதல் 100 இடங்களை பிடிக்கும் இந்திய பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டிற்கான முதல் 100 பிரபலங்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இது அக்டோபர் 1, 2018 முதல் செப்டம்பர் 30, 2019 வரையிலான காலத்தில் மதிப்பிடப்பட்டதாகும். அதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.252.7 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ளார்.கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த பாலிவுட் திரைப்பட நடிகர் அக்‌ஷய் குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அதேநேரத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் சல்மான் கான் (ரூ.229.25 கோடி) இந்த ஆண்டு 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தி திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி ஆகியோர் முறையே 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர். பாலிவுட் திரைப்பட நடிகர்கள் ஷாருக் கான், ரன்வீர் சிங் 6-வது மற்றும் 7-வது இடத்தையும், நடிகைகள் ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோனே 8-வது மற்றும் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *