விக்ரம் நடிக்கும் படம் ‘‘கோப்ரா’’

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, இப்போது விக்ரம் நடிக்க படம் இயக்கி கொண்டு இருக்கிறார்.. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக படக்குழுவினர் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மேலும் டைட்டிலுக்கான வீடியோ ஒன்றையும் படக்குழுவினர்வெளியிட்டிருக்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *