BREAKING NEWS

கடவுள் வேடத்தில் விஜய் சேதுபதி

‘ராட்சசன்’‘ என்ற வெற்றி படத்தை கொடுத்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி பட நிறுவனம் அடுத்து ‘‘ஓ மை கடவுளே‘‘ என்ற படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். கதாநாயகனாக அசோக் செல்வனும்,கதாயாகியாக ரித்திகா சிங்கும் நடித்துள்ல இப்படத்தின் மூலம் சின்னதிரை நாயகியான வாணி போஜன் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.படத்தின் கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகம் ஆகிறார்,அஷ்வத் மாரிமுத்து. இப்படம் பற்றி தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபுவும், இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவும் நிருபர்களிடம் கூறியதாவது:-இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார். அதுவும் படத்தில் அவர் கடவுளாக வருகிறார். அது மிகவும் கலகலப்பாக இருக்கும். அதே மாதிரி படத்தில் இன்னொரு முக்கிய வேடமாக டைரக்டர் வேடம் வருகிறது. இதில் கவுதம் மேனன் நடித்தால் நன்றாக இருக்கும் என் கருதி அவரை அணுகினோம். கதையை கேட்டு அவரும் படத்தில் டைரக்டராகவே நடித்துள்ளார்.
இப்படமும் காதலை பற்றிய படம் தான். ஆனால் கதை புதுசாக இருக்கும். தமிழ்நாட்டில் தான் அதிகமான விவாகரத்துகள் நடக்கிறது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றால் இந்த விவாக ரத்துக்கு காரணம் யார்?அப்படியானால் இந்த திருமணங்களில் கடவுள் தப்பாக எழுதி விட்டாரா? இத்தகைய கேள்விக்கு விடையாக ‘‘ஓ மை கடவுளே‘‘ படம் இருக்கும்‘‘நகைசுவை கலந்து கொடுத்து இருக்கிறோம்.‘‘
இவ்வாறு அவர்கள் கூறீனார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *