BREAKING NEWS

2-வது நாளாக ரெய்டு: பிகில் படத்துக்கு விஜய் பெற்ற சம்பளம் ரூ.30 கோடி…? வருமான வரித்துறை தகவல்

நடிகர் விஜய்யிடம் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பிகில் படத்துக்கு விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக அதிகாரிகள் கூறினர்.

சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்திற்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் பைனான்ஸ் செய்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடுகள் என வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிகில் படத்திற்கு நடிகர் விஜய் சம்பளம் வாங்கியது தொடர்பாகவும் புகார் எழுந்தது. இது தொடர்ந்து நேற்று முன்தினம் நெய்வேலியில் நடைபெற்று வந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விஜய்யிடம் வருமான வருத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவரை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர். மேலும் சாலிகிராமத்தில் பெறப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், வங்கி தொடர்பான ஆவணங்கள் மேலும் கல்பாத்தி அகோரம் வீட்டிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து நடிகர் விஜய்யிடம் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பப்பட்டது. நடிகர் விஜய் அலைபேசியை பயன்படுத்தவோ, வீட்டிலிருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யிடம் விடிய விடிய நடைபெற்ற விசாரணை 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சோதனை நடைபெற்று வரும் நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் பிகில் படத்திற்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் ரூ.30 கோடி என்று கூறினர்.

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *