BREAKING NEWS

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு… சரணடைந்த இடைத்தரகர் புதிய மனு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருந்தார். அவர் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் தமிழகத்தை விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்றே கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் போலீசார் விரைந்தனர். அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் இன்று சரண் அடைந்தார். இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *