BREAKING NEWS

டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் டாங்கி செயலி

டிக்டாக் செயலிக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் ‘டாங்கி’ செயலி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
வாட்ஸ் ஆப் செயலிக்கு அடுத்தபடியாக டிக்டாக் செயலி தற்போது உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலியாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் டிக்டாக் செயலியை உபயோகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் டாங்கி களமிறங்கவுள்ளது. டிக்டாக் செயலியைப் போன்று இதில் குறுகிய வீடியோக்களை உருவாக்கலாம். முதற்கட்டமாக இணையதளம் மற்றும் ஐ.ஓ.எஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மக்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த செயலியில் பல புதுமையான விஷயங்கள் புகுத்தப்படுகிறது என்றும் ஒரு நிமிட அளவிலான குறுகிய வீடியோக்களை இதில் உருவாக்கலாம் என்றும் டாங்கி செயலி நிறுவனர் தெரிவித்துள்ளார்.
தற்போது சோதனையில் இருக்கும் இந்த செயலி விரைவில் இணையதளம் மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *