BREAKING NEWS

கேரளாவில் வெயில் தொடங்கியது: மதியம் 3 மணி நேரம் கட்டாய ஓய்வு

‘கேரளாவில் வெயில் அதிகரித்துள்ளதால், திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, பகலில் மூன்று மணி நேரம் கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்’ என, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, கேரளாவில் வெயில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயில் அதிகமாக இருக்கும். இந்தாண்டு கேரளாவில் ஜனவரி முதல் வழக்கத்தைவிட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. 37 டிகிரி செல்சியசைக் கடந்து விட்டது.

இதையடுத்து, ‘தொழிலாளர்கள், காலையில் இருந்து மாலை வரை, வெயிலில் வேலை செய்ய முடியாது என்பதால், பகல் 12:00 முதல் 3:00 மணி வரை கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு இந்த நடைமுறையைப் பின்பற்றியதால், கடும் வெயிலால் ஏற்படும் உயரிழப்புகளைத் தவிர்க்க முடிந்தது’ என, கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *