BREAKING NEWS

உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் குடமுழுக்கு சிறப்பாக நடந்தது

உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை, உக்கடம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில்.
இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக லட்சுமி நரசிம்மர் கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.
அதனைத் தொடர்ந்து கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டு பல்வேறு கால பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் கோயில் குடமுழுக்கு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு குடமுழுக்கு விழாவைத் தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக போலீசார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *