BREAKING NEWS

இசை அமைப்பாளர் ஆக காரணம் அக்கா பவா தான் ~ யுவன்சங்கர் ராஜா நெகிழ்ச்சி

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘‘மாயநதி‘ ‘பெண்களை மையமாக வைத்து உண்மை சம்பவங்களோடு எடுக்கப்பட்ட இக்கதையில் நாயகன் நாயகியாக அபி சரவணனும்- வெண்பாவும் நடித்து இருக்க கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார், அசோக் தியாக ராஜன்.இவர் ஒரு டாக்டர்.
இப்படத்துக்கு இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி இசை அமைத்து இருக்கிறார்.
இபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரை அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு டைரக்டர் அமீர் தலைமை தாங்க பவதாரணியின் தம்பியும் இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டு படத்தின் அடியோவையும், டிரையிலரையும் வெளியிட்டார்
அவர் பேசுகையில் கூறியதாவது:-இசையை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஏன் என்றால் நான் முறைப்படி இசையை கற்று கொண்டவன் அல்ல.
எங்க வீட்டில் அண்ணனும், அக்கா பவாவும் (பவதாரணி) தான் மியூகி கற்று கொண்டவர்கள். நான் வெட்டியா வீட்டில சும்மா தான் இருப்பேன். அப்போ அக்கா பவா தான் என கை பிடித்து ஏதாவது கற்றுக்கொள் என்று பியானோ கற்று கொடுத்தாள். எனக்கு அப்படி பியானோ தான் தெரியும். அண்னாவும், அக்காவும் மியூசிக் கற்று கொள்ள ஜீ கே மாஸ்டரிடம் செல்வார்கள். கூட நானும் போவேன். ‘எனக்கும் மியூசிக் பேசிக் மட்டுமாவது கற்று கொடுக்கும் படி அக்கா சொன்னாங்க. அதுக்கு மாஸ்டர் என்னிடம் ‘‘உனக்கு என்ன தெரியும்?‘‘ என்றார்.ர். பியானோ வாசிப்பேன் என்றேன். வாசித்து காட்டினேன். பேசிக் எல்லாம் வேணாம்.உனக்கு தெரிஞ்சதை செய். போதும் என்றார். அப்படி தான் செய்துட்டு இருக்கேன். ஆக நான் இன்று இசை அமைக்கிறேன்னா அது அக்கா பவா தான் காரணம்‘‘ என்றார்.
இயக்குனர் அசோக் தியாக ராஜன் பேசுகையில்,,‘‘பேசிக்கா நான் ஒரு டாக்டர். இருந்தாலும் சினிமான்னா எனக்கு உயிர். ஆரம்பத்தில் கதை கட்டுரை கவிதை எழுதி வந்தேன். அதன் அடுத்த கட்டம் தான் இந்த டைரக்ஷன். நான் பார்த்த சம்பவங்களின் உணர்ச்சிகர தொகுப்பு இது என்றார்.
மற்றும் இயக்குனர் அமீர், நடிகர்கள் அபி சரவணன், சவுந்தர ராஜன், அப்புகுட்டி, இயக்குனர் சுப்பிரமணிய சிவா ஆகியோரும் பேசினார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *