BREAKING NEWS

அஜித் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

நடிகர் அஜித் இப்போது, வினோத் இயக்கத்தில், ‘‘வலிமை’’ என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தை நடிகை ஸ்ரிதேவியின் கணவரும், ‘நேர்கொண்ட பார்வை‘‘ படத்தை தயாரித்தவருமான போனிகபூர் தயாரித்து வருகிறார்.
‘வலிமை’‘. படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற பின் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
படத்திற்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதன்பின் வலிமை படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ரஜினியின் ‘தர்பார்‘ படத்திலும் இருப்பதாக தகவல் வரவே, தர்பார் பட வெளீயீட்டிற்காக காத்திருந்தனர்.
தர்பார் படம் வெளீயாகி நீண்ட நாட்கள் ஆகி விட்ட நிலையில், வலிமை படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வலிமை படத்தை போனிகபூருடன் இணைந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு இருந்த ‘ஜீ ஸ்டுடியோஸ்‘ படநிறுவனம் இப்போது இப்பட தயாரிப்பில் இருந்து விலகி விட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும் போனி கபூர் வலிமை படம் தவிர இந்தி, தெலுங்கு மொழிகளிலும் படங்களை தயாரித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் ஜி ஸ்டூடியோவும் விலகியது அவருக்கு பணப்பிரச்சினையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அவர் , பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியனிடம் ‘பைனாஸ்‘ வாங்கக் காத்திருந்தாராம். ஆனால், அவர் சமீபத்திய வருமானவரி சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்தும் பணவரவு குறைந்துவிட்டது என்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *