BREAKING NEWS

குடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக லக்னோவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு அமித்ஷா பேசுகையில்,  பாகிஸ்தான் சொல்வதை காங்கிரஸ் வழிமொழிகிறது. பாகிஸ்தான் மொழியில் ராகுல் பேசி வருகிறார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திரிணமுல் கட்சிகள் வன்முறையை தூண்டி விடுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து, எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். இதற்கான இடத்தை தேர்வு செய்ய முடியுமா என ராகுல், மம்தா, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு சவால் விடுகிறேன்.

சுதந்திரத்தின் போது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனில் இருந்த சிறுபான்மையினர் இன்று பெரும்பாலான அளவு குறைந்துவிட்டனர். அவர்கள் எங்கு செல்வார்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டும் என கேட்கிறேன். யாரின் குடியுரிமையையும் பறிப்பதற்கான அம்சம், குடியுரிமை சட்டத்தில் இல்லை. குடியுரிமை வழங்கவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. நேரு செய்ய முடியாததை மோடி செய்துள்ளார். முத்தலாக் மசோதாவையும் எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிராக யார் வேண்டுமானாலும் போராடலாம். நாங்கள் பின்வாங்க மாட்டோம். ராமர்கோயில் கட்டுவதை காங்கிரஸ் ஆட்சி தாமதப்படுத்தி வந்தது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில், ராமர்கோயில் கட்டுமானப் பணி, 3 மாதத்தில் துவங்கப்படும் என்றார்.

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *