பிரபல லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் தற்கொலை

தமிகழகத்தில் பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் உரிமையாளர்கள் ராமன் – லஷ்மன் சகோதரர்கள்.

இதில் ராமன் அவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராமன் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இகடந்த சில மாதங்களாக கடும் உடல்நலக் குறைவால் ராமன் பாதிக்கப்பட்டதாகவும், நேற்று தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இசை நிகழ்ச்சியை அவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், இன்று தற்கொலை செய்திருப்பது, இசையுலகில் பெரும்  அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் இப்படியான விபரீத முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமன் நீண்ட காலமாக சர்க்கரை நோய், இதய அடைப்பு, மூலம் போன்ற பல வியாதிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார் எனவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்க கூடும் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *