BREAKING NEWS

மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’ இசை வெளீயிடு

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. அவரிடம் உதவி இயக்குனராக இருந்த தனா இயக்கி இருக்கிறார், சரத்குமார் ,விக்ரம் பிரபு, மடோனா ஜெபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஸ் ,சாந்தனு ஆகியோர் நடிக்க பாடகரான சித் ஸ்ரிராம் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் இயக்குனர் மணிரதனம் அவரது மனைவி சுகாஷினி ஆகியோர் கலந்து கொண்டு இசை தட்டை வெளியிட்டனர்
விழாவில் சரத்குமார் பேசும்போது,‘‘ இயக்குனர் தனா கதைகூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி என்றார்.
நடிகர் சாந்தனு பேசும்போது,‘‘கடந்த 10 வருடங்களாக போராடிக் கொண்டிருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது. அதன்பிறகு இந்த படத்தின் மூலம் சிறந்த பாதை உருவாகியுள்ளதில் மகிழ்ச்சி.‘‘என்றார்.
இசையமைப்பாளர் சித்ராம் பேசும்போது இசையமைப்பாளராக இப்படம் எனக்கு முதல் படம். இயக்குனர் மணிரத்னம் மற்றும் தனா இருவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். 1960களில் எனது தாத்தா இசையமைப்பாளராக இருந்திருக்கிறார். இயக்குனர் இதனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *