BREAKING NEWS

‘ஹீரோ’ படத்தின் கதை திருட்டு கதையே

இரும்பு திரை படத்தை இயக்கிய பி.எஸ் மித்ரன் அடுத்து இயக்கியுள்ள படம். சிவகார்த்தியேகன் நடித்த இந்த படம் கடந்த வாரம் வெளிவந்தது.
இப்படம் வெளிவரும் முன்பே இப்படத்தைன் கதை என்னுடையது என போஸ்கோ பிரபு என்ற துணை இயக்குனர், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்திருந்தார். அதோடு கோர்ட்டில்வழக்கும் தொடர்ந்திருந்தார்.
போஸ்கோ பிரபுவின் புகாரை ஏற்ற்கொண்ட கே.பாகியராஜ தலைமையிலான திரைப்பட எழுத்தாளர் சங்கம் சங்க உறுப்பினர்கள் 16 பேர்களை வைத்து விசாரணை நடத்தியது. இறுதியில் பி.எஸ்.மித்ரன் படமாக்கி இருந்த ஹீரோ கதையும், போஸ்கோ பிரபுவின் கதையும் ஒன்றுதான் என்று முடிவு செய்துள்ளது.
தங்களது முடிவை போஸ்கோ பிரபுவுக்கு தெரிவித்து எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த கடித்ததின் சுருக்கம் வருமாறு:
தங்கள் புகாரின் அடிப்படையில் தங்கள் கதையையும், பி.எஸ்.மித்ரனின் ஹீரோ கதையையும் நானும் சங்க உறுப்பினர்கள் 18 பேரும் படித்து ஒப்பிட்டு பார்த்ததில் இரண்டு கதைகளுக்கும் ஆரம்பம் முதல் கடசி வரை ஒற்றுமை இருப்பதை தொடர்பு அனைவருமே ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க மித்ரனிடம் கேட்டபோது அவர் விளக்கம் அளிக்காமல் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ‘கேவியட்‘ எடுத்து அதன் காப்பியை அனுப்பினர். இது எழுத்தாளர் சங்கத்தை அவமதிக்கும் செயல் என்று உறுப்பினர்கள் கருதுகிறார்கள். அவர்மீது நடவடிக்கை எடுக்க கூறினார்கள்.
நமது சங்கத்தின் 18 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கதையும் ஒன்றே என்பதை உறுதிபட கூறியதை தலைவரான என் மூலம் தங்களுக்கு சாட்சி கடிதமாக தருகிறோம். இதனை தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கிற்கு சாட்சியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.. நீதி மன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்துக்கள்.
இவ்வாறு அந்த கடித்தில் பாக்யராஜ் எழுதியுள்ளார்.




One thought on “‘ஹீரோ’ படத்தின் கதை திருட்டு கதையே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *