படமாகிறது, இளையராஜா வாழ்க்கை வரலாறு

வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை சினிமா படமாக எடுக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை 3 பேர் படமாக்கி வருகிறார்கள். கிரிகெட் வீரர் கபில் தேவ் வாழ்க்கை இந்தியில் தயார் ஆகிறது
இப்போது இசை அமைப்பாளர் இளைய ராஜாவின் வாழ்க்கை வரலாறும் சினிமா படமாக எடுக்கப்படும் என தெரிகிறது. இதை அவரது மகனும் இசை அமைப்பாளருமான யுவன் சங்க்கர் ராஜாவே இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி யுவன் சங்க்கர் ராஜா கூறுகையில்,‘‘
இசையில் பல சாதனைகளைப் படைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்
. இந்தப் படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக தெரிவித்த அவர், படத்துக்கு ‘ராஜா தி ஜெர்னி’ என்ற டைட்டில் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குவது உறுதி செய்யப்பட்டால் அந்தப் படத்தில் இசைஞானி கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் மிக பொருத்தமாக இருப்பார் என்றும் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.
இதனால் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *