BREAKING NEWS

பட்ஜெட் அச்சடிக்கும் பணிக்கான விழா அல்வாவுடன் தொடக்கம்

2020-21ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிக்கை அச்சிடும் பணியை அல்வா விழாவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

2020-21ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்.,1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான பட்ஜெட் அறிக்கை அச்சிடும் பணி, டில்லியில் இன்று (ஜன.,20) தொடங்கியது. இதற்கு முன்னதாக ஒரு பெரிய பாத்திரத்தில் அல்வா தயாரிக்கப்பட்டு, அச்சிடும் பணியில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அல்வா விழாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்து அனைவருக்கும் பரிமாறினார்.

ஒவ்வொரு ஆண்டும், பார்லி.,யில் மத்திய பட்ஜெட் அறிக்கை அச்சிடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக, அல்வா விழாவை பாரம்பரியமாக கருதி பின்பற்றி வருகிறது. விழா முடிவடைந்ததும், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அச்சிடும் பணியை தொடங்குவர். பட்ஜெட் குறித்த விவரங்கள் வெளியில் கசியாத வகையில், 10 நாட்களும் இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருப்பர். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தான் குடும்பத்தினருடன் இணைவர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *