BREAKING NEWS

விமர்சனம் – தம்பி

ஜோதிகாவும் கார்த்தியும் இணைந்து நடிக்க , ‘பாபநாசம்‘ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கும் படம்..அதனால் படத்துக்கு எக்கப்பட்ட எதிர்பார்ப்பு.
கதை..? கிட்ட தட்ட பாபநாசம் படத்தின் கதை மாதிரி தான் சஸ்பெண்ஸ் திரில்லர் படம்.
நீலகிரியில் உள்ள கூடலூரை சேர்ந்தவர் சத்யராஜ். அவருக்கு ஒரு மகள் (ஜோதிகா) ஒரு மகன் (கார்த்தி). சிறுவயதில் மகன் காணாமல் போக 15 வருடம் கழித்து அவர் கோவாவில் இருப்பதாக தெரியவருகிறது. ‘பக்கா பிராடான’‘ அவனை அழைத்து கொண்டு விட்டுக்கு வருகிறார். சத்யராஜ். எல்லோரும் அவனை ஏற்றுக்கொள்ள ஜோதிகா மட்டும் தம்பியை உதறி தள்ளுகிறார். இந்த நிலையில் ஊர் திரும்பிய தம்பியை கொலை செய்ய சிலர் முயல அதில் இருந்து தப்பும் கார்த்தி ‘தன்னை ஏன் கொலை செய்ய வரவேண்டும்?‘‘ என காரணம் தேட மர்ம முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடிப்பது கதை.
அக்காவாக ஜோதிகாவும் தம்பியாக கார்த்திக்கும் நடித்து இருப்பதால். ‘‘ஆகா அக்கா தங்கை பாசத்தில் படம் செமத்தியாக இருக்கும்‘‘ என்று போனால், படத்தில் அக்கா தம்பி பாசமே இல்லை.
அத்ற்கு பதிலாக தம்பியை வெறுக்கும் அக்கா வேடத்தில் ஜோதிகா. எப்பேர் பட்ட நடிகை? அவருக்கு படத்தில் நடிக்கவே வாய்ப்பு இல்லை. வெறும் முறைப்போடு சரி.
கார்த்திக் கோவாவில் இருக்கும் வரை ‘பிளேபாய்‘ கேரக்டரில் உற்சாகப்படுத்தி இருக்கிறார். ‘‘பிராடு‘‘ செய்யும் அவர் தம்பியாக ஊருக்குள் வந்ததும் குடும்பத்தினர் பேசும் விவரத்தை செவிகளில் கேட்டு கேட்டே தம்பியாக விளையாடுவது பலே. மற்றபடி எதுவும் இல்லை. ஒரு சண்டைகாட்சியில் மட்டும் செம முறுக்கு.
கதாநாயகியாக நிகிலா. நானும் ஒரு நாயகி என சொல்லி கொள்ளலாம்.
தந்தை வேடத்தில் சத்யராஜ்.மகன் மீது பாச மழையை பொழியும் அவர்தான் மகனுக்கு வில்லனே என தெரியவரும் போது பகிர் என்கிறது.
பார்வையாலேயே நடிக்கும் பாட்டி சவுகார் ஜானகி. கார்த்தி போலி என சிக்கிகொள்ளபோகும் சமயத்தில் வீல் சேரில் இருந்து கிழே விழுந்து ‘கண்ணடித்து‘ கார்த்தியை காப்பாற்றுமிடம் அனுபவ பாட்டி.
ஜோதிகாயும் கார்த்தியையும் வசனத்தினாலேயே வாரி விடும் அந்த சிறுவன் அஸ்வந்த் – ‘செம‘.
இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு என்னாச்சு? பாடல்கள் எதுவும் எடுபடவில்லை. ஊட்டியின் அழகை அள்ளி வந்து இருக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் காமிரா.
சத்யராஜை பதவி வெறி பிடித்த அரசியல் வாதியாக எங்கேயும் காட்டவில்லை. ஊர் பெரியவர் போல் தான் காட்டி இருக்கிறார்கள். இறுதியில் அரசியலுக்காக அவர் தான் அத்தனையும் செய்தார் என கூறும் போது ஏற்கமுடியவில்லை.
கடைசி 15 நிமிட காட்சிகள் தான் படமே. குற்றவாளி இவர் தான் என ஒவ்வொருவர் மீதும் முடிச்சு போட்டு ஒவ்வொருமுடிச்சாக அவிக்கும் இடத்தில் திரில் பற்றிகொள்கிறது. அங்கே நிற்கிறார், டைரக்டர் ஜீத்து ஜோசப்
இதையே படம் முழுக்க அழுத்தமாக தந்து இருந்தால் ‘தம்பி‘ –ஆகி இருக்கும் ‘தங்க கம்பி‘
One thought on “விமர்சனம் – தம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *