இணைய தளத்தில் வெளியான தம்பி, ஹீரோ படங்கள்

கார்த்தி, ஜோதிகா, நடித்த ‘‘தம்பி‘‘ படமும், சிவகார்த்திகேயன் நடித்த ‘‘ஹீரோ‘‘ படமும் நேற்று முன்தினம் வெளியாயின.
2 படங்களும் தியேட்டரில் வெளியான சில மணி நேரங்களிலேயே ‘ஆன்லைன் பைரசி இணைய தளங்களில்‘ திருட்டுத் தனமான வெளியாகி விட்டது. இதனால் 2 படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை நம்பித்தான் திரைப்படத்தின் வசூலே இருக்கிறது.அதற்கு முன்னரே, திரையரங்குகளில் ரிலீசான சில மணி நேரங்களிலேயே இணையத்திலும் வெளியானதால் விடுமுறை நாட்களில் படத்திற்கு போகலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களை வரவிடாமல் தடுப்பதாக அமைந்து விடும். இதனால் படங்களின் வசூல் பெரும் அளவில் பாதிக்கும் என்று திரைத்துறையினர் கவலை தெரிவித்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *