டி.சி.எல். சி8 சீரிஸ் 4கே ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

டி.சி.எல். நிறுவனத்தின் சி8 சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.க்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டி.சி.எல். நிறுவனத்தின் புதிய சி8 சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.க்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டி.சி.எல். சி8 4கே ஏ.ஐ. டி.வி. சீரிஸ் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது.
இவற்றில் 55 இன்ச் மாடலில் 54.6 இன்ச் டிஸ்ப்ளேவில் 3840×2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 4கே பேனல் கொண்டிருக்கும் இந்த டி.வி.யில் டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 மற்றும் டி.சி.எல். நிறுவனத்தின் வைடு கலர் கமுட், ஹெச்.டி.ஆர். டைனமிக் காண்டிராஸ்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.
இந்த டி.வி. டூயல் கோர் பிராசஸர், டூயல் கோர் ஜி.பி.யு. மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்ட ஆன்கியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் இதில் ஏ.ஐ. பார்பீல்டு குரல் அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் டி.வி.யினை தங்களது குரல் மூலமாகவே இயக்க முடியும்.
இதில் டூயல் பேண்ட் வைபை, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், கூகுள் பிளே ஸ்டோர் வசதி, பில்ட் இன் கூகுள் அசிஸ்டண்ட் சேவை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு யு.எஸ்.பி. 2.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. 2.0, SPDDIF டிஜிட்டல் ஆடியோ ஆப்டிக்கல், 1 எக்ஸ் ஆடியோ அவுட், ஒரு ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சி8 சீரிஸ் உடன் டி.சி.எல். நிறுவனம் மொத்தம் ஏழு அல்ட்ரா இன்வெர்ட்டர் ஏ.சி. மாடல்களையும். டி.சி.எல். ஹோம் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கொண்டு வீட்டில் உள்ள பல்வேறு சாதனங்களை ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும்.
இந்தியாவில் டி.சி.எல். சி8 55 இன்ச் 4கே டி.வி. விலை ரூ.49,990 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ.69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *