BREAKING NEWS

ரூ.10 லட்சத்தில் தயாரான தமிழ்படம்

ஒரு சினிமா படம் தயாரிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2 கோடி வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் வெறும் 10 லட்சத்தில் ஒரு படத்தை ஆஸ்திரேலியாவில் உருவாக்கி உள்ளனர்.
அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், பின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து ‘‘கெட்டவன்‘‘ படத்தை இயக்கியவர். படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறியதாவது:
ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது.
பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள்.
இது ஒரு மர்டர் மிஸ்டரி படம். பாடல் காட்சிகள் எதும் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.
படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்து விடுவார்கள்.
எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்.இவ்வாறு டைரக்டர் கண்டி கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *