BREAKING NEWS

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தெரியாமல் பேசுவதா? ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமைச் சட்டத்தில் உள்ள கஷ்டங்களை தெரிந்துகொண்டால் தனது கருத்தை மாற்றிக் கொள்வார் என நம்புவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த கோவளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அவர் மக்களிடம் கையெழுத்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும், போராடும் முன் மாணவர்கள் சிந்தித்து முடிவெடுக்கவும் ரஜினி அறிவுறுத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின் குடியுரிமைச் சட்டத்தின் பாதிப்புகளை ஆய்வு செய்து ரஜினி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *