சிம்புவுக்கு வில்லனாக ‘நான் ஈ’ சுதீப்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘‘மாநாடு‘‘ படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதை இயகுனர் வெங்கட் பிரபு இயக்குவதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் சிம்பு படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கவே படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
அதன் பிறகு சிம்பு தரப்பில் இருந்து சமாதான கொடி பறக்க விடவே சிம்புவுக்கும், சுரேஷ் காமாட்சிக்கும் இடையே இருந்த மன வருத்தங்களை சிலர் முன்னின்று போக்கினர். இதையடுத்து, மீண்டும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். வரும்
புது வருடம் பிறந்ததும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் இருந்து மாநாடு படத்தை துவங்குகின்றனர். அதற்காக, தீவிர உடல் பயிற்சியில் இருக்கும் சிம்பு, படத்துக்காக உடம்பை தயார்படுத்தி வருகிறார்.
இதற்கிடையில், படத்தில் சிம்புவுக்கு இணையாக வில்லன் கேரக்டர் ஒன்று உள்ளது. அதில், நடிகர் அரவிந்தசாமியை நடிக்க வைக்க முயற்சித்தனர். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், நான் ஈ, புலி படங்களில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப்பை வில்லனாக நடிக்க கேட்டு இருந்தனர். அவர் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *