மாணவியின் பேச்சை கேட்டு கண்கலங்கிய சூர்யா

நடிகர் சூர்யா படங்களில் நடிப்பதுடன் சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கும் வகையில் ‘அகரம் ‘அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்க வைக்கப்பட்டுள்ளனர்..
இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார்
நிகழ்ச்சியில் சூர்யா பேசியதாவது:-
அகரம் பத்தாண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருகிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. அடுத்து முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அகரம் அறக்கட்டளை “இணை” எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. . “அகரம்” மூலம் என் தம்பி, தங்கைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவ்வாறு சூர்யா பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் பேசிய போது தனது குடும்ப சூழ்நிலைகளையும், கஷ்டங்களையும் விவரித்தார். இதை கேட்ட சூர்யா, மேடையிலேயே கண் கலங்கினார். சுமார் 10 நிமிடம் வரை அவர் மேடையில் அழுதபடியே இருந்தார். பின், அந்த மாணவிக்கு தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *