BREAKING NEWS

வினியோகஸ்தர்கள் மிரட்டல்… – ஏ.ஆர்.முருகதாஸ் புகார்

தர்பார் பட விவகாரத்தில் வினியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பு கோரியும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தர்பார் பட விநியோகத்தில் நஷ்டம் அடைந்ததாகவும், இழப்பீடு கோரியும் தினமும் 30 முதல் 40 வினியோகஸ்தர்கள் மிரட்டும் வகையில் செயல்படுவதாக ஏ.ஆர்.முருகதாசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு தனிப்பட்ட முறையிலும், தனது வீடு மற்றும் அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *