BREAKING NEWS

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக தஞ்சாவூருக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு ரெயில்கள்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. வண்டி எண்.06841 திருச்சி-தஞ்சாவூர் டெமு சிறப்பு ரெயில், இன்று முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை திருச்சியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும். வண்டி எண்.06842 தஞ்சாவூர்-திருச்சி டெமு சிறப்பு ரெயில் இன்று முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சியை சென்றடையும். வண்டி எண்.06116 தஞ்சாவூர்-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் இன்று முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 12 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும். வண்டி எண்.06115 மயிலாடுதுறை-தஞ்சாவூர் சிறப்பு ரெயில் இன்று முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.
வண்டி எண்.06828 தஞ்சாவூர்-திருவாரூர் டெமு சிறப்பு ரெயில் இன்று முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவாரூரைச் சென்றடையும். வண்டி எண்.06813 திருவாரூர்-தஞ்சாவூர் டெமு சிறப்பு ரெயில் பிப்ரவரி 5-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை திருவாரூரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, காலை 5.45 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.வண்டி எண்.06815 காரைக்கால்-தஞ்சாவூர் டெமு சிறப்பு ரெயில் இன்று முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை காரைக்காலில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.

பஸ்கள் அதிகரிப்பு

வண்டி எண்.06812 தஞ்சாவூர்-காரைக்கால் டெமு சிறப்பு ரெயில் இன்று முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு காரைக்காலை சென்றடையும். இந்த ரெயில்கள் அதன் வழித்தடங்களில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். சிறப்பு ரெயில் சேவையையொட்டி சில ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி எண்டி எண்.76813/76818 காரைக்கால்- வேளாங்கண்ணி-காரைக்கால் டெமு பயணிகள் ரெயில் மற்றும் வண்டி எண்.76814/76817: வேளாங்கண்ணி-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி டெமு பயணிகள் ரெயில்களின் சேவைகள் இன்று முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 560 பஸ்களை விட கூடுதலாக 250 சிறப்பு பஸ்கள் கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளன. மேலும் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
=====

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *