BREAKING NEWS

வனத்தீயை கட்டுப்படுத்த சிறப்பு கமாண்டோ: சைலேந்திரபாபு

தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் 331 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. 7,300 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் நடந்த பல்வேறு சம்பவங்களில், 250 பேர் உயிரோடு மீட்டுள்ளோம். காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க சிறப்பு கமாண்டோ படை உருவாக்கப்பட்டு 700 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து பணியாற்றுவார்கள். வனப்பகுதியில் தீ ஏற்படும் போது, தீயணைப்பு வாகனங்களை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து வனத்துறையினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *