கொரிய படத்தின் தழுவலா ‘மாஸ்டர்’..?

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்
இந்த படத்தின் கதை கொரியன் படத்தின் தாக்கத்தால் உருவானது எனத் தெரிய வந்துள்ளது. கொரிய மொழியில் வெளியான ‘சைலன்ஸ்டு’ திரைப்படத்தின் கதையை ஒட்டி இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கொரிய படம் கடந்த 2011 இல் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. இதுவரை வெளியான புரட்சிகர படங்களில் ஒன்றாக இதனை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர் விக்கிபீடியாவில் உள்ள தகவல் அடிப்படையில், ‘சைலன்ஸ்டு’ திரைப்படம் பள்ளி மாணவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிராக போராடும் ஒரு ஆசிரியரின் கதையை பிரதானப்படுத்தி இருந்தது. ‘‘மாஸ்டர்‘‘படத்திலும் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் அதோடு இவர் சென்னையில் பங்கேற்ற படப்பிடிப்பும் பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *