ஸ்கோடா விஷன் கான்செப்ட் எஸ்.யு.வி. வரைபடம் வெளியீடு

ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல் காரின் கேப்ன் வரைபடம் வெளியாகியுள்ளது.ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது விஷன் ஐ.என். கான்செப்ட் காரின் முதல் உட்புற வரைபடங்களை வெளியிட்டுள்ளது.

புதிய கான்செப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இது ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் 2.0 திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் வாகனம் ஆகும். ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய கார் 2021 ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

காரின் டேஷ்போர்டு அகலமாகவும், பல்வேறு நிறங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டின் ஓரங்களில் ஏர்கான் வென்ட் இடம்பெற்றுள்ளது. இதன் மத்தியில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இத்துடன் விர்ச்சுவல் காக்பிட் மற்றும் புதிய க்ரிஸ்டலைன் எலிமென்ட் உடன் வழங்கப்படுகிறது.கேபினில் 3ஸ்போக் மல்டிபங்ஷன் ஸ்டீரிங் வீல் பட்டன்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல் 4.26 மீட்டர் நீலமாக இருக்கும் என ஸ்கோடா ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. புதிய விஷன் ஐ.என். கான்செப்ட் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *