BREAKING NEWS

தலைவர் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில்  சில நேரங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.  குறிப்பிட்ட பிரிவினரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  மர்மநபர்களால் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்து பேசியதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த சாலவாக்கம் பகுதியில் தந்தை பெரியாரின் சிலை இன்று  அதிகாலை, மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தந்தை பெரியாரின் சிலை சேதமடைந்தது குறித்து டிஜிபி திரிபாதி, ‘தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *