BREAKING NEWS

கதாநாயகியுடன் நடனம் ஆடிய அண்ணாச்சி

பிரபல துணிக்கடை அதிபர் சரவணன், தனது கடை சம்பந்தப்பட்ட விளம்பர படங்களில் நடித்து வந்தார்.பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே சமீபத்தில் ‘லெஜெண்ட் சரவணன்‘ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி,னார். அதில் கதாநாயகனாக சரவணன் நடிக்க கதாநாயகியாக கீத்திகா திவாரி நடிக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கியவர்களும், உல்லாசம் பட இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி இயக்குகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் ஒரு பாடல் காட்சிகாக ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாக அரண்மனைப் போல் அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அதில் சரவணன் கதாநாயகியுடன் நடனம் ஆட கூடவே நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களும் ஆடும் காட்சி படமாக்கப்பட்டது.. அண்ணாச்சியின் நடனத்தை சக கலைஞர்களே வியந்துள்ளனர். இவரின் நடன போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *