BREAKING NEWS

இந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா

தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா ‘‘யூ டர்ன்’‘ என்ற படத்தில் நடித்தார். அப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து அப்படத்தை அதே பெயரில் தமிழிலும் தயாரித்தார்கள். அதிலும் சமந்தா நடித்தார்.

படம் வெற்றிஇப்போது அப்படத்தை இந்தியில் தயாரிக்கிறார்கள். அதிலும் சமந்தாவே நடிக்க வேண்டும் என அவரை படதயாரிப்பாளர்கள் அணுகினார்கள். ஆனால் இந்தி பட வாய்ப்பை சமந்தா மறுத்து விட்டார். ‘‘ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை‘‘ என்று மறுத்து விட இப்போது டாப்சியிடம் பேசி வருகிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *