BREAKING NEWS

சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு

தமிழில் பானா காத்தாடி மூலம் அறீமுகம் ஆனவர் சம்ந்தா. அதை தொடர்ந்து பிரபல கதாநாயகர்கள் அனைவருடன் ஜோடியாக நடித்து விட்ட இவர் தெலுங்கில் சென்று அங்கும் வெற்றி கொடி நாட்டினார். நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில்நடித்து வருகிறார்.
தமிழில் வெளியான 96 படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் வெளிவருகிறது. இதில் திரிஷா நடித்த வேடத்தில் சம்ந்தா நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன்களில் அவர் பரபரப்பாக உள்ளார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில் தனது எதிர்காலம் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
“எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது, எனது குடும்பத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டும். ஒரு நாயகியின் திரையுலக வாழ்க்கை என்பது குறுகிய காலம் மட்டுமே. அதனால், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை நடிப்பேன். ஆனால், அதுவரையிலும் நான் நடிக்கும் படங்கள் காலத்திற்கும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய படங்களாக இருக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *