BREAKING NEWS

டெல்லியில் காங்கிரஸ் நிலை… ராஜினாமா செய்த சாக்கோ வேதனை…

டெல்லியில் காங்கிரசின் ஓட்டு வங்கி, ஆம் ஆத்மிக்கு சென்றுவிட்டதாகவும், அது திரும்பாது எனவும் அக்கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத அக்கட்சியால், 63 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதனையடுத்து, டில்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அக்கட்சி மூத்த தலைவர் பிசி சாக்கோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக அவர் கூறுகையில், ஷீலா தீக்சித் , டில்லி முதல்வராக இருந்தபோதே, 2013ல் காங்கிரசின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. ஆம் ஆத்மி கட்சி துவங்கியவுடன், காங்கிரசின் மொத்த ஓட்டு வங்கியும் அக்கட்சிக்கு சென்றுவிட்டது. அதனை நாம் திரும்ப பெற முடியாது. அந்த ஓட்டு வங்கி ஆம் ஆத்மியிடமே நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *