BREAKING NEWS

அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே..நண்பனே..

நடிகர் கமல்ஹாசன்சின்ன வயதிலேயே. குழந்தை நட்சத்திரமாக நடித்ததாலும், நடனம், இயக்கம், ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாலும் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. பள்ளிபடிப்போடு படிப்பை நிறுத்தி கொண்டவர் அவர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்.சி.டி.எம் பள்ளிகூடத்தில் தான் அவர் பள்ளிபடிப்பை படித்தார்.இந்த பள்ளியில் 1970ம் ஆண்டில் படித்த மாணவர்களின் மறு சந்திப்பு நிகழ்ச்சி (ரீயூனியன்) நடந்தது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். பள்ளியின் சீருடையான காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் அனைவரும் கலந்து கொண்டனர்.
தனது வகுப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வுக்கூடம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தார். இந்த நிகழ்ச்சியில் கமலுடன் படித்த 20பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார் கமல்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *