BREAKING NEWS

ரஜினியின் பாராட்டு மறக்க முடியாதது

தமிழில் ‘8 தோட்டாக்கள்‘‘ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆனவர் நடிகர் வெற்றி. கடந்த ஆண்டு வெளிவந்த அவரது ‘‘ஜீ வி‘‘ படம் மிகபெரிய வெற்றியை தழுவியது.அப்படத்தின் வெற்றி அவரை தேடி 10 க்கும் மேற்பட்ட படங்கள் வந்தன. அவற்றில் 5 கதைகளை தேர்வு செய்த வெற்றி இப்போது ஒரே நேரத்தில் 3 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத பற்றி நிருபர்களூக்கு பேட்டி அளித்த வெற்றி கூறியதாவது:-
‘‘ஜி வி’‘ படத்தின் வெற்றி என்னை ரசிகர்களிடம் மேலும் முன் நிறுத்தி விட்டது. என்னை தேடி 10 க்கும் அதிகமான கதைகள் வந்தன. அதில் 5 கதைகளில் இப்போது நடித்து வருகிறேன். இதில் முதல் படத்தின பெயர் ‘‘கேர் ஆப் காதல்’’. இது தெலுங்கு படமான கேர் ஆப் கச்சிராப்பலம்’’ படத்தின் தமிழ் பதிப்பு ஆகும். படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த ஹேமம்பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஒயின் ஷாப்பில் வேலை செய்யும் ஊழியனாக நடிக்கிறேன்.
இப்படம் முடிந்து.விட்டது. அடுத்து ‘‘வனம்’’ என்ற படத்தில் நடித்துள்ளேன் பூர்வீக ஜெமத்தை அடிப்படையாக கொண்ட திரில்லர் படமான இதில் அரசு கலை கல்லூரியில் சிற்ப கலை பயிலும் மாணவராக நடிக்கிறேன். இதுவும் முடிந்து விட்டது.3 வது படமாக குரு ராமானுஜம் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். முழுக்க முழுக்க காட்டில் படமாகும் கதை இது.படத்துக்கு இன்னும் பெயர் வைக்க வில்லை.இப்படம் முடிந்ததும் அடுத்த 2 படங்கள் பற்றிய அறிவிப்பு வெளிவரும்.8 தோட்டாக்கள் படத்தை பார்த்த ரஜினி சார் எனக்கு போன் செய்து, படத்தில் நன்றாக நடித்து இருப்பதாக கூறி பாராட்டி பேசினார். என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் இது. அப்போது வெளியூரில் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் சந்திக்க முடியவில்லை அவரை நேரில் சந்திக்கும் நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்து இருக்கிறேன்..இவ்வாறு வெற்றி கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *