BREAKING NEWS

கே.பாலசந்தரின் நஷ்டத்தை ஈட்டுகட்டியவர் ரஜினிகாந்த்

தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருந்தவர் டைரக்டர் கே.பாலசந்தர்.இவர் மறைந்து 5 ஆண்டு ஆனதையொட்டி அவரது நினைவு தின நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்தது,
விழாவில் அவரது சீடர்களான ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி ஆகியோர் சார்பில் ‘கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்‘ தொடங்கப்பட்டது. சங்க பலகையை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார்
விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல்.ஆகியோர் ஆகும்.மூவருக்கும் அவ்வளவு செய்து இருக்கிறார், பாலசந்தர்.
‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது ‘நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் ‘என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியவர் நடிகர் ரஜினிகாந்த்.
சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது.
இவ்வாறு நடிகர் சிவக்குமார் பேசினார்.
மற்றும் நடிகர்கள் ராஜேஷ் , நாசர், ரமேஷ் கண்ணா, பூ விலங்கு மோகன், பட அதிபர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், இயக்குநர்கள் டி.பி.கஜேந்திரன் கே.எஸ்.ரவிக்குமார் , சரண், கண்மணி சுப்பு
‘கராத்தே’ ஹூசைனி ஆகியோரும் பேசினார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *