BREAKING NEWS

ரஜினி பெருமைமிகு தமிழன்: கமல் புகழாரம்

நடிகர் கமல்ஹாசனும் நடிகர் ரஜினிகாந்தும் திரைஉலகையும் தாண்டி தீவிரமான நண்பர்கள். இருவருமே அரசியலிலும் கால் பதித்து வருகிறார்கள். கமல் அரசியல் பயணித்தை ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டார். ரஜினி எப்படியும் அரசியலுக்கு வந்தே தீருவேன் என கூறி வருகிறார். சமகாலத்து நடிகர்களான இருவரும், சமீபமாக அரசியலிலும் நெருக்கம் காட்டி வருகின்றனர். இருவரும் இணைந்து பயணிக்கும் திட்டத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் தன் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை ‘டாக்‘ செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,’ரஜினி எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் தமிழ்நாடு அவருக்கு உதவி செய்துள்ளது. அவர் பிறந்த இடம் வேறென்றாலும் இன்று அவர் ஒரு பெருமைக்குரிய தமிழன்’ என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *