BREAKING NEWS

விஜய்- அஜித் பற்றி ராதிகா

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில்ராதிகா , தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: –
“இது எங்கள் நீதி படத்தில் விஜய்யுடன் தான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையன். வந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டுவேன். விஜய் இவ்வளவு பெரிய நடிகரா, இவ்வளவு பெரிய மனிதரா வருவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை. இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு தானும் மகிழ்ச்சியடை கிறேன்..
‘‘பவித்ரா‘‘ என்ற படத்தில் நான் அஜித்துடன் இணைந்து நடித்தேன். அஜித் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும். மேலும், அஜித்தை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள் என நானே பல தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன்”
இவ்வாறு ராதிகா கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *