BREAKING NEWS

விமர்சனம் ~ சைக்கோ

பெயருக்கு தக்க மாதிரி ‘சைக்கோ’’ தனமான படம் இது.

 

ஒரு இருட்டு அறை.யில் தொடங்குகிறது, படம். ‘‘ஸ்டெச்சர்’’ரில் ஒரு இளம் பெண் கட்டி வைக்கப்பட்டு இருகிறாள்.காப்பாற்றும்படி கதறுகிறாள். ஒருவன் உள்ளே வருகிறான் ஸ்டெச்சரை இறக்கி அவளது தலையை மட்டும் தொங்க விடுகிறான். அடுத்த நிமிடம்.ஆடு வெட்டும் கத்தியை எடுத்து ஓங்கி ஒரே போடு. பெண்ணின் கழுத்து துண்டாகி கீழே விழுகிறது. பதறுகிறது நெஞ்சு.அவனோ தலையை மட்டும் எடுத்து சேமித்து வைக்கிறான். தலை இல்லாத உடலை தூக்கி நடுரோட்டில் வைத்து விட்டு செல்ல அலறுகிறது, போலீஸ்.

‘‘எவண்டா அவன்?‘ என அவனை தேடுகிறது. ஒரு பயனும் இல்லை. இப்படி இரண்டு ஆண்டுகளில் 14 பெண்களின் தலையை வெட்டி எடுத்துவிட்டு முண்டத்தை மட்டும் போடும் அந்த பயங்கர குற்றவாளியை‘  கண் தெரியாத ஒரு வாலிபன் கண்டு பிடிக்கும் கதையே ‘சைக்கோ’‘

 

கண் தெரியாத வாலிபன் கண்டு பிடிக்கிறானா? அது எதுக்கு என கேட்கிறீர்களா? அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அவன் காதலிக்கும் பெண்ணையும் அந்த சைக்கோ கடத்தி சென்று விடுகிறான்.. நடக்க இயலாத ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் துணையுடன் தனது காதலியை மீட்பதாக கதையை முடித்து இருக்கிறார்கள்.

.

கண் தெரியாத வாலிபராக உதயநிதி வாழ்ந்திருக்கிறார். தனது காதலி போகும் இடமெல்லாம் போய் ஆனந்தப்படுவதும், ஒரு கட்டத்தில் அவள் பொது இடத்தில் அசிங்கப்படுத்தும்போது  அவமானத்தில் கூனி குறுகி நிற்பதும் ,தனது புத்திசாலி தனத்தால் துப்பு துலக்கிக்கொண்டே செல்வதும் என வித்தியாசமான நடிப்பை தந்து இருக்கிறார்.

‘சைக்கோ’‘ வாலிபராக வரும் ராஜ்குமார். பெண்ணின் தலையை சும்மா வெட்டி வெட்டி வீழ்த்துகையில் பதறுகிறது தியேட்டர். அந்த அளவுக்கு நடித்து இருக்கிறார். படத்தின் நாயகனும் இவர் தான்.

 

காதலியாக அதிதிராவ். அவர் கண் முன்னாடியே ஒவ்வொரு தலையாக வெட்டப்பட்டு விழ பதறும் காட்சிகளில் ‘‘பட பட‘ நடிப்பு.‘

 

உதயநிதிக்கு உதவும் முன்னாள் பெண் போலீஸ் அதிகாரியாக நித்யா மேனன். நடக்க முடியாமல் வீல் சேரிலேயே உட்கார்ந்து இருக்கும் பரிதாபகரமான வேடம். அந்த கோபத்தில் அவர் பேசும் ஏச்சும் பேச்சும் சரி, கொலைகாரனை கண்டுபிடிக்க போடும் திட்டமும் சரி அமர்களம்.

.

கொலை நடந்த இடத்தில்  விசாரணைக்கு செல்லும் போலீஸ் அதிகாரி அங்கு போய் பாட்டு பாடுவாரா என்ன? போலீஸ் அதிகாரி ராம் அப்படி பாடுகிறார். என்னத்த சொல்ல..?

 

கண் தெரியாத உதயநிதிக்கு ‘வெளிச்சமாக’ சிங்கம் புலி. அருமை. ஆனால் அவர் கொலையாகப்போகிறார் என்பது படம் பார்ப்போருக்கு தெரிந்து விடுவதால் அவரது கொலை எடுபடவில்லை.

 

படத்துக்கு  மிகபெரிய பலம் இளையராஜாவின் பின்னணி இசை. மிரட்டி இருக்கிறார். தன்வீர்மிர்ரின் காமிரா இருட்டுக்குள் புகுந்து விளையாடி இருக்கிறது.

 

.கதை எழுதி இயக்கி இருப்பவர்  மிஷ்கின். படத்தின் முக்கால் வாசி வரை அவ்வளவு விறு விறுப்பு. சைக்கோ எதற்காக இத்தனை கொலை செய்கிறான் என ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு காத்திருக்க இயக்குனர் மிஷ்கின் சொல்லும் காரணம்  ;படுஅருவெறுப்பு’.

 

படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் வேறு. கண் தெரியாத கதாநாயகன் கார் ஓட்டி செல்கிறார்.2 வருஷமாக கொலைகாரனை தேடுகிறார்களாம். ஒரு சி சி டி காமிராவை பார்த்தால் தெரிந்து விடபோகிறது. கொலை செய்யப்பட்ட பெண்களுக்கும் கொலைகாரனுக்கும் என்ன சம்பந்தம் என்பதும் கடைசி வரை சொல்லப்படாதது குழப்பம்

.

இந்த ‘‘சைக்கோ‘‘ –வை குழந்தைகளும், பெண்களும் பார்க்கமுடியாது. மற்றவர்கள் ரசிக்கலாம்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *