மெரினாவில் போராட்டம்: எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்பட 311 பேர் மீது வழக்கு

நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாகப் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை கொலை செய்ய தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை கண்ணனை கைது செய்துள்ளனர். அவர் மீது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 311 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *