BREAKING NEWS

தமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது

சிறைத்துறைக்கான ஜனாதிபதி விருது பெறுபவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

சிறைத்துறை சார்பில் ஜனாதிபதி விருது பெறுபவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, கொக்கிகுளம் கிளை சிறை இணை செயலாளர் கீதா, அருப்புக்கோட்டை கிளை சிறை உதவி ஜெயிலர் கண்ணன், திருப்பூர் மாவட்ட சிறை காவலர் தமிழ்மாறன், மகளிர் சிறை இணை ஜெயிலர் பாய் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *