BREAKING NEWS

‘பாகுபலி’ பிரபாஸின் அடுத்த படம்

மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘‘பாகுபலி‘‘படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ். இவர் அடுத்து ‘‘சஹோ‘‘ என்ற படத்தில் நடித்தார்.
இப்போது அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை. கோபி கிருஷ்ணா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தெலுங்கு திரையுலகின். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு தனது மேற்பார்வையில் வழங்குகிறார்.
கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தை ‘‘ஜில்‘‘ தெலுங்கு படத்தை இயக்கிய ராதா கிருஷ்ணா இயக்குகிறார்.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *