BREAKING NEWS

பாண்டிசேரியில் ‘பொன்னியின் செல்வன்’

டைரக்டர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாக எடுத்து வருகிரார். அவர் இயக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நடந்து முடிந்தது. இப்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பாண்டிச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் ஜெயம் ரவி நடிக்கும் காட்சிகள் 6 நாட்கள் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *