பிழை – விமர்சனம்

கிராமத்தில் கல் உடைக்கும் வேலை செய்யும் பெற்றோர்கள் தங்களை மாதிரி தங்கள் பிள்ளைகளும் படிக்காமல் பிற்காலத்தில் கஷ்டப்படகூடாது என கருதி நன்றாக படிக்க சொல்லி கண்டித்து வளர்க்கிறார்கள். பெற்றோரின் கண்டிப்பை தவறாக கருதும் 3 பிள்ளைகள் வீட்டுக்கு தெரியாமல் பட்டணத்துக்கு ஓடி போகிறார்கள். பட்டணத்தில் அவர்கள் படும் பாடு அந்தோ பரிதாபம்! ‘இறுதியில் படிப்பே சிறந்தது’‘ என உணர்ந்து ஊர் திரும்பும் கதை இது.
ஓவ்வொரு ஊரிலும் நடக்கும் – நடந்து கொண்டிருக்கும் சம்பவத்தை அற்புதமாக தந்து இருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.
சின்ன படம் தான். ஆனால் படம் முழுக்க சிறப்பான நடிப்பு இருக்கிறது. பெற்றோராக மைம் கோபி , சார்லி ,ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களை நடிகர்களாக பாக்க முடியவில்லை.கிராமத்து ஏழை ஜனமாகவே பார்க்க முடிகிறது. அனுபவ நடிப்பை அள்ளி வழங்கி இருக்கிறார்கள், மூவரும்.
சிறுவர்களாக ரமேஷ், நாஸத் கோகுல். இந்த சிறுவர்களை சுற்றித்தான் கதை நகருகிறது. சோத்துக்கே வழி இல்லாமல் ஓட்டலில் ‘கொத்தடிமை’ யாக வேலை செய்யும் அவலம் பரிதாபம். ஒரு இரவு பசியால் துடிக்கும் இவர்கள் முன்பு சாப்பிட்டு போட்ட எச்சில் இலையை வீசி ‘எடுத்து சாப்பிடுங்கடா..‘என ஓட்டல்காரனே கூறும்போது கண்கலங்குகிறது,
சிறுவர்களை கண்டு பிடிக்க வரும் போலீஸ் அதிகாரி ‘லஞ்சம்’ வாங்கிகொண்டு நழுவும் இடம் – ‘அடப்பாவி பயலே‘ எம சொல்ல வைக்கும் இடம்.
கிராமத்து காட்சிகளை தத்ரூபமாக தந்து இருக்கும் ஒளிப்பதிவாளர் பாக்கி பாராட்டுக்குரியவர்.பி.எஸ்.பைசலின் இசையில் கிளைமாக்ஸ் பாடல் உருக வைத்துள்ளது.

‘பிழை’ – பிழைத்துக் கொள்ளும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *