BREAKING NEWS

விமர்சனம் – பட்டாஸ்

இந்தியன்’ படத்தில் லஞ்சப்பேர்வழிகளை கமலஹாசன் ‘வர்மகலை’யால் தாக்கி அழிப்பார் அல்லவா? அந்த கலைக்கும் ‘‘களரி’‘ சண்டைக்கும் முன்னோடியாக இருந்த கலைக்கு ‘‘அடிமுறை’’ என்று பெயர். ஆனால் அந்த கலை இப்போது இல்லை.
அந்த கலையை இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் கண்டெடுத்து கதை சொல்லி இருப்பது தான் ‘‘பட்டாஸ்‘‘.அதற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு.
தனுஷ் தான் கதாநாயகன். ‘‘அடிமுறை‘‘ கலையில் மன்னவன். கலையில் சிறந்து விளங்கும் அவனை ‘‘ஆகா ஓகோ‘‘ என புகழ்கிறார், ‘ஆசான்’’நாசர். இது அவரது மகன் நவீன் சந்திராவுக்கு பிடிக்கவில்லை. அடிமுறை கலையில் தன்னால் பிரகாசிக்க முடியவில்லையே என அவமானபடும் அவன் தனுசையும், தனது தந்தையையும் கொன்று விட்டு வெளிநாட்டுக்கு ஒடி விடுகிறான். அங்கு ‘அடிமுறை’ கலையில் சிறிது மாற்றம் செய்து ‘‘கிக் பாக்ஸிங்’‘ என்ற கலையை உருவாக்கி தமிழகத்தில் அதை பரப்ப வருகிறான். அவனை தனுஷின் மகன் பழிக்கு பழி தீர்ப்பது கதை.
தந்தை மகனாக தனுஷ். இதில் தந்தை தனுஷ் வேடம் கம்பீரம். ‘அடிமுறை‘ கலையில் அவர் போடும் சண்டையும். உடல் வளைவும் கை கால் அசைவுகளும் இன்னொரு அசூரனை பார்த்த மாதிரி இருக்கிறது.
ஆனால் மகன் ‘பப்டாஸ்‘ திருஷ்டி பரிகாரம்.குப்பத்து பையனாக அஷால் குஷால் வேலைகள் செய்த போதும் எடுபடவில்லை.‘‘ஜிகிடி கில்லாடி‘‘ பாடலுக்கு தனுஷ் ஆடும் ஆட்டம் அருமை.
தந்தை தனுஷுக்கு ஜோடியாக சினேகா. படத்தின் அச்சாணியும் இவர் தான். இவரை வைத்து தான் கதை சுழல்கிறது. ஆரம்பத்தில் ஜெயில் கைதியாக இருக்கும் போதும் வெளியே வந்ததும் வில்லனின் உயிரை எடுக்க காட்டும் தீவிரமும் எதிர்பார்ப்பை கூட்டியிருப்பது நிஜம். ‘அடிமுறை’‘ சண்டையிலும் அசத்தி இருக்கிறார், சினேகா.
மகன் தனுசுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடா. துடுக்கு தன நடிப்பு துள்ளல்.
வில்லன் பேசி கொண்டே இருக்கிறாரே தவிர செயலில் ஒன்றும் இல்லை.
பாடலை விட பின்னணி இசையில் ‘பட்டாசாக’ வெடித்து இருகிறது விவேக் மெர்லின் இசை.
அழிந்து போன தமிழர்களின் முன்னோடி கலையான ‘‘அடிமுறை‘‘ கலையை அறிமுகப்படுத்தியதற்காக இயக்குனர் துரை செந்தில் குமாரை பாராட்டலாம். ஆனால் திரைக்கதையை சுவராஸியத்தோடு கொடுக்க தவறி விட்டார்.
படத்தின்முதல் பாதி நசிந்து போன பட்டாசு.. பிற்பாதி சரியான ‘சரவெடி’‘




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *