BREAKING NEWS

‘சைக்கோ‘ படத்தின் 2 ம் பாகம் வருகிறது

டபுள் மீனிங் புரடெக்‌ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘‘சைக்கோ‘‘ படம் மிகபெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இதையொட்டி படகுழுவினர் பத்திரிகையாளர்ர்களை சந்தித்தனர்.நிகழ்ச்சியில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின்,நடிகைகள் நித்யா மேனன். ரேணுகா, நடிகர்கள் சிங்கம்புலி, ராஜ்குமார், பாடல் ஆசிரியர் கபிலன், இயக்குனர் மிஷ்கின் பட தயாரிப்பாலர் அருண்மொழி மாணிக்கம் மற்றும் படகுழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அபோது பேசிய நடிகர் சிங்கம் புலி ‘‘ சைக்கோ‘‘ படம் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே சைக்கோ 2 ம் பாகம் தயாரிக்க வேண்டும்‘‘ எனறார்.
அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலினும் இதை ஆமோதித்தார். ‘‘சைக்கோ படத்தின் 2 ம் பாகத்தை உருவாக்கவேண்டும் என்று மிஸ்கினிடம் நானும் கேட்டு இருக்கிறேன். அது கண்டிப்பாக நடக்கும்‘‘என்றார்.
இயக்குனர் மிஷ்கின் பேசுகையில்‘‘ உதயநிதிக்கு படம் பண்ன நான் எப்போதும் ரெடி‘. சைக்கோ 2 ம் பாகம் நிச்சயம் வரும்‘‘ என்றார். அதோடு ‘‘இப்படத்தில் பல குறைகள் இருப்பதாகவும் சொல்லகூடாததையெல்லாம் மிஷ்கின் சொல்கிறார் எனவும் விமர்சனம் செய்கிறார்கள்.வழக்கமான படம் எடுக்க என்னால் முடியாது. அது போர் அடிக்கும். எனக்கு அப்படி எடுக்க தெரியாது. வித்தியாசமாக எடுப்பது தான் என் பாணி. குறைகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது. குறையோ அல்லது தவரான கண்ணோட்டத்திலோ படம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்‘‘ என்றார்
நித்யாமேனன் பேசுகையில்,‘‘எனக்கு சின்ன பட்ஜெட்டில் வித்தியாசமான வேடத்தில் நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சைக்கோ வேடம் எனக்கு புதுசாக பட்டது.அதும் படம் முழுக்க கெட்டவார்த்தை பேசும் கேரக்டர். என் வாழ்க்கையில் நான் கெட்டவார்த்தை பேசியதே கிடையாது.அதற்கான அர்த்தமும் தெரியாது. டைரக்டர் மிஷ்கின் பேச சொன்னார். அவரை நம்பி பேசினேன்‘‘என்றார்.
சைக்கோ படம் வாங்கிய வினியோகஸ்தர்களும் விழாவில் பேசினார்கள் வினியோகஸ்தர் மூர்த்தி பேசுகையில்‘‘ வசூலில் தர்பார் படத்தையும் வீழ்த்தியது சைக்கோ படம்‘‘என்று பேச கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *